இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் , விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகளை நிறைவு செய்வதற்காக, பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இத்தகைய பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருந்தாலும், சில வெளிப்புற காரணிகள் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
சர்வதேச மோதல்களின் தாக்கம் இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ புயலின் பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் முமூமையாக மீண்டுவரவில்லை என்பதையும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த, சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளது.



