சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று திங்கட்கிழமை (16) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்துள்ளார்.
கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் மேலும் மூன்று தூதுக்குழு உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.
வெளிவிகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர்.



