இலங்கை அரசாங்கம் வற், வருமானவரி நிவாரணங்களை மக்களிற்கு வழங்கதிட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேசநாணயத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஆராய்ந்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் நோக்கங்கள் குறித்த கொள்கையளவிலான அரசாங்கத்தின் பரந்துபட்ட உடன்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி இந்த நோக்கங்களை மக்களின் சுமைகளை குறைக்கும் மாற்றுவழிகள் ஊடாக அடையவேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்.