சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்திய அவர், எனவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



