சட்டவிரோதமாக இறக்குமதியான கழிவுகள்-பிரிட்டனிடம் திருப்பி அனுப்பிய இலங்கை

சட்டவிரோதமாக இறக்குமதியான கழிவுகள்

சட்டவிரோதமாக இறக்குமதியான கழிவுகள்: இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதியான ஆயிரக் கணக்கான டன் கழிவுகளை பிரிட்டனுக்கே  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வசதியான நாடுகள் சில, ஆசிய நாடுகளுக்கு அவற்றின் கழிவுகளை அனுப்பி வருவதாக நம்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சில ஆசிய நாடுகள் அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு கழிவுகளை மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்புகின்றன.

பிரட்டினிலிருந்து இலங்கைக்குச் சென்றடைந்த கழிவுகள், 2017ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்பட்டன. அவை, பயன்படுத்தப்பட்ட மெத்தை, கம்பளம் போன்ற பெயர்களில் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் உண்மையில் கொல்கலன் சரக்கில் மருத்துவமனையில் அகற்றப்பட்ட சடலங்களின் பாகங்கள் போன்ற உயிரியல் கழிவுகள் சேர்க்கப்பட்டன என்றும் அவற்றிலிருந்து துர்நாற்றம் வெளியானதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்,இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதியான   கழிவுகளை பிரிட்டனுக்கு  திருப்பி அனுப்பியுள்ளது இலங்கை.