“நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி சமஷ்டியை ஏற்படுத்துங்கள்” இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“அதனை விடுத்து கவர்ச்சிகரமான வசனங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியதாது. ஜனாதிபதி பதவி வகிப்பவர் எந்நிலையிலும் உண்மையை குறிப்பிட வேண்டும் அதனை விடுத்து அப்பட்டமாக பொய்யுரைக்க கூடாது.ஜனாதிபதியின் கருத்துக்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதுடன் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகமாக கருதப்படும்” என கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.