உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களுக்கும் பிள்ளையானுக்கும் நேரடித்தொடர்பு என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஈஷ்டர் குண்டு தாக்குதல் 2019,ஏப்ரல்,19ல் இடம்பெற்று 06, வருடங்கள் 05, மாதங்கள் 13, நாட்கள் கடந்த பின் னர் கடந்த வியாழக்கிழமை 2025, அக்டோபர், 02 ல் கூறியுள்ளார்.
பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், 2025,ஏப்ரல்,08, ல்,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திர நாத் கடத்தப்பட்ட விவகாரமே அவர் கைது செய்யப்பட்ட தற்கான காரணம் என்று அப்போது கூறப்படுகிறது.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நேரடித் தொடர்பு பிள்ளையான் என்ற தகவல் இப்போது ஒரு அமைச்சரே உறுதிப்படுத்திவிட்டார்.
இலங்கை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களிலும், மட்டக்களப்பில் தேவாலயத்திலும் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டு வெடிப்புகள் காலை 08.30 இற்கும் 09.15 மணிக்கு மிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள்,03 காவல் துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.
இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் இடம்பெறும்போது ஆட்சியில் ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன ஈஷ்டர் குண்டு தாக்குதல் இடம்பெற்று ஏறக்குறைய 07, மாதங்களில் 2019, நவம்பர், 16, ல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று கோட்டபாயராஷபக்ஷ ஜனாதிபதியா னார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் மட்டக் களப்பு சிறைச்சாலையில் 2020, நவம்பர்,24, வரை சுமார் 05, வருடங்கள் சந்தேக நபர் கைதியாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் பிணையில் விடுதலை செய்வதற்கு 01, வருடமும்,07, மாதங்களுக்கு முன்னரே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஈஷ்டர் குண்டுத்தாக்குதலில் பிள்ளையா னுக்கும் தொடர்பு இருந்தது என கூறவில்லை அப்படி கூறியிருந்தால் பலருடன் பிள்ளையானும் ஒருவன் என கொள்ளலாம்.
பிள்ளையான் நேரடித்தொடர்பு என அழுத்தமாக கூறியதால் ஒரு சிறைக்கைதி மட்டக்களப்பு சிறைச் சாலையில் சந்தேக கைதி யாக இருந்து நேரடியாக சம்மந்தப்பட்டார். அப்படியானால் சிறைக்குள் இருந்து வெளியில் சென்று திட்டங்களை தீட்டினாரா? அல்லது சிறைக்குள் இருந்து சம்மந்தப் பட்டவர்களை சிறைக்குள் வரவழைத்து திட்டங் களை வழிப்படுத்தினாரா ? நேரடித் தொடர்பு பிள்ளையான் எனில் பக்க தொடர்புகள் யார்? இந்த தற்கொலை தாக்குதலால் யார் நன்மை அடைந்தார்? பிள்ளையானை நேரடித்தொடர் புக்கு பயன்படுத்திய அந்த பெரும்புள்ளி யார்? இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், படைத்தரப்புகள் தொடர்பில்லாமல் தனி ஒரு மனிதன் அதுவும் சிறைச்சாலையில் இருந்து நேரடியாக தொடர்புபட்டார் என்பதை நம்பு வதற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை ஏனைய சூத்திரதாரிகளையும், அவருக்கு இதனை செய்யு மாறு கட்டளையிட்டவர்யார் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச் சர் உடனே அந்த நபர்களையும் கைது செய்ய வேண்டும் சந்தேக நபர்களுடைய பெயர்களை வெளியிடவேண்டும் என்பதே எல் லோருடைய எதிர்பார்ப்பு
மட்டக்களப்பு சிறையில் இவ்வாறான ஒரு கொலைச்சதிகளில் பிள்ளையான் நேரடியாக தொடர்புகளை பேண சிறைச்சாலை அதிகாரிகள் இடம்கொடுத்தனரா? சிறைச்சாலை என்ன உணவு விடுதியா? இப்படியான பல கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பதில் சொல்லியே ஆகவேண்டும். வெறுமனமே பிள்ளையான் நேரடித் தொடர்பு என மட்டும் கூறுவதால் ஈஷ்டர் குண்டு தாக்குதலை கண்டு பிடித்ததாக கூற முடியாது.
பிள்ளையான் இந்த தாக்குதலுக்கு தொடர் பாக இருந்ததை பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் நெருக்கமாவும் அந்த கட்சியின் ஊடக செயலாளராகவும் இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானாவை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் அசாத்மௌலானா பகிரங்கமாகவே தொடர்ச்சியாக கடந்த நான்கு வருடங்களாக கூறிவந்தார்.
அவரை இலங்கைக்கு அழைத்துவந்து சாட்சியங்களை பெறுவதாக பலதடவைகள் செய்திகள் வந்தன.
ஆனால் அவரை அழைத்துவந்து விசாரித்ததாக இது வரை எந்த தகவல்களும் வெளிவராத நிலையில் தற்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நேரடித்தொடர்பு பிள்ளையான் என்பதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மட்டும்தான் பிள்ளையான் நேரடித் தொடர்பாக இருந்ததாரா?
ஏனைய கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்தி ரநாத் கடத்தப்பட்டமை, மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சந்திரநேரு, தமிழர் புனர்வாழ்வுக்கழக பிறே மினி உட்பட ஆறுபேர், இதுபோன்ற பல கொலைகளுக்கு இவர் நேரடித்தொடர்பு, பக்க தொடர்புகள் பற்றியும் வெளிக்கொணர்வதும் தற் போதைய அரசின் கடமை.