இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் – ஐஸ்லாந்து அதிபர்

129 Views

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து அதிபர் Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் பலப்படுத்தப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐஸ்லாந்து ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலுள்ள நட்புறவை தற்போது மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த உறவு எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் மேலும் பல நன்மைகளை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply