எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ் வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூரியுள்ளார்.
அவர் அங்கு தெரிவிக்கையில் ,ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பினார்கள் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுகிறது.
கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை எம்மிடம் கையளித்தார்கள் அதனை நாம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாழ் மக்கள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கினார்கள் அவர்களின் எதிர்பார்ப்பை நாம் சிதறடிக்க மாட்டோம் என இந்தப் பொங்கல் நாளில் கூறி வைக்க விரும்புகிறேன்.
எமது பயணம் பல்வேறு சவால்கள் இடையூறுகளின் மத்தியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணையை யும் மக்களின் நம்பிக்கையையும் பலப்படுத்தும் முகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் முகமாக எமது அரசாங்கத்தின் செயல்பாடுகள் முன்னோக்கி நகர்ந்துவருகின்ற நிலையில் இதைப் பொறுக்க முடியாதவர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்புகிறார்கள்.
ஆகவே தமிழ் மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்களின் நம்பிக்கையை சிதறடிக்காமல் பலப்படுத்துவோம் நீங்களும் எம்மோடு இணைந்திருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


