நடந்த உண்மையை கூறினேன்;பூதாகரமாக்குவதில் அர்த்தமில்லை-கருணா

தேர்தல் மேடைப் பிரசாரத்தில், ஓர் உவமையாக நான் கூறியதைப் பூதாகரமாக்குவதில் எந்தவோர் அர்த்தமும் இல்லையென, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகைதந்து வாக்குமூலமளித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “நடந்த உண்மையை நான் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் கூறவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை” என்றார்.

இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால், எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம்” என்றார்.