பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பதற்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கைக்கு எட்டியிருக்கின்றது. அது வாயை முழுமையாக எட்டுவதற்கு அவசியமான இறுதிக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பற்றிய எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் மட்டுமல்ல நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், நிதி நிறுவனங்களிடமும் மிகுந்திருந்தது. இந்த எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடமும்கூட மிக ஆழமாக வேரூன்றியிருந்தது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாங்க முடியாத சுமையே இதற்குக் காரணமாகும். சாதாரண மக்கள் தமது உயிர் வாழ்வுக்கான உணவு நுகர்வில் முதலில் உணவின் அளவைக் குறைத்தார்கள். அதன்மூலம் நிலைமையைக் கட்டுப்பாட்டினுட் கொண்டுவர முடியவில்லை. நிலைமையை சமாளிப்பதற்காக ஒரு நாளைக்கான மூன்று வேளை உணவை இரண்டு நேரமாகவும், சில குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேரம் உண்பது என்ற ரீதியிலும் தமது உணவு நுகர்வுப் பாரம்பரிய பழக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.
குடும்பங்களின் சாதாரண வருவாய், நாட்டின் அதிகரித்த பணவீக்கம் காரணமாக பெறுமதி இழந்து போனது. பணவீக்கத்தின் உடனடி விளைவாகிய விலையேற்றத்தினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு மக்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதுவே உணவு நுகர்வில் பாதிப்பை ஏற்படுத்தியது.
எரிபொருள், மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பவற்றினால் கட்டுப்பாடின்றி அதிகரித்துப்போன போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக வரண்டு போயிருந்த தனது வருமானத்தை வரிவிதிப்புக்களின் மூலம் அரசாங்கம் ஈடு செய்ய முயன்றது. அதேவேளை இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவரது தலைமையிலான அரசக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மாததிரமே ஒரேயொரு வழியாக அமைந்தது
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது சாதாரணமாகக் கிட்டுவதாக இல்லை. கடன் மீளசெலுத்துகையில் ஒரு நிலையான வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய ஒரு தொகுப்புச் செயற்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட நேர்ந்தது. இந்த தொகுப்பு வேலைத்திட்டம் என்பது அரசாங்கத்தின் வருவாயை நிரந்தரமாக்குவதை முதன்மையாகக் கொண்ட வரிவிதிப்புச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல அடிப்படை நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.
இது பொருளாதார நெருக்கடியில் ஏற்எனவே நலிந்து போயுள்ள மககளின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துவிட்டது. குறிப்பாக பணவீக்கம், விலை அதிகரிப்பு என்பவற்றினால் பெறுமதி இழந்துபோன பண வீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் குறைந்த வருமானத்திற்காகக் கூடிய கடின உழைப்பில் மக்கள் ஈடுபட நேர்ந்துவிட்டது.
இத்தகைய பின்னணியில்தான், இந்த பொருளாதார நெருக்கடியை அரசியலாக்கி அதில் குளிர்காய்வதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஏன் ஒரு சில பொது அமைப்புக்களும்கூட, அனைத்து விடயங்களையும் இலகுவில் அரசியலாக்கிவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில எல்லாமே அரசியல்தான். அரசியல் இல்லாத விடயங்களே நாட்டில் இல்லை என்று கூறும் அளவிற்கு எதிலும் அரசியல்தான். எல்லாமே அரசியல்தான். இந்த ந்pலைய்ல் அரசியலாக்குவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்த பொருளதாரா நெருக்கடி நிலைமையைச் சும்மா விட்டுவிடுவார்களா, என்ன…..?
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடைவு வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று எதிராகவும் அரசியல் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இத்தகைய அரசியல் கூச்சல் குளறுபடிகளுக்கு மத்தியிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான சிக்கல்கள் நிறைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அது வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியவுடன், அதனையும் அரசியலாக்கிவிட்டார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியதைப் போன்று கடன் கிடைதததையும் அரசியலாக்கி, அதனை ஒரு வெற்றி நிகழ்வாக வெடிகளைக் கொளுத்தி கொண்டாடியுள்ளனர். நாட்டின் அனைத்துத் தரப்பினரும் இவ்வாறு வெடிகளைக் கொளுத்தி ஆரவாரமாகக் கொண்டாடியிருக்கின்றார்கள். இந்த வெற்றிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுககுப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வந்து குவிந்த வண்ணமிருக்கின்றன..
இதனையடுத்து, நாட்டிற்குக் கடன் கிடைத்ததைக் கொண்டாடியவர்களாக இப்போது இலங்கை மக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலைமை ஆரோக்கியமானதல்ல. முன்னேற்றமடைய வேண்டிய ஒரு நாட்டின் கலை, கலாசார பண்பியல்களுக்குப் பொருத்தமானதுமல்ல. கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று மிகவும் பிரபலமான பாடல் வரியொன்று வழக்கத்தில் இருக்கின்றது. கடன்படுவதன் மூலம் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து இது எடுத்திமு;புகின்றது. பொதுவில் கடன்படுதல் என்பது வீழ்ச்சிக்கும், அவமானத்தின் ஆரம்பத்திற்கும் உரிய அடையாளமாகவே கருதப்படுகின்றது.
பெரும் இக்கட்டான சூழலில் கைகொடுத்து உதவுவது கடன்;களே என்பதில் எந்தவித சள்தேகமும் இல்லை. ஆனால் ஏற்கனவே மீள முடியாத அளவில் கடன்களில் மூழகியுள்ள நிலையில், இறுக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிலையில் மேலும் கடன்படுவதை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. இந்த நிலையில் முடிந்த அளவில் அதனைத் தள்ளிப்போட்டு, கடன்பெறாமலேயே காரியங்களை; சாதித்துவிட வேண்டும். அதுவே எதிர்காலத்திற்கு நல்லது என்று மறை ந்pலையில் அந்;தப் பாடல் வரி எச்சரிக்கையுடன் அழுத்தி உரைக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.
இது ஒரு புறமிருக்க, நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு செவிசாய்க்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவை அறிக்கைவிடச் செய்து, பின்னர், ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அந்த அறிவித்தல் குழப்ப நிலைமைக்கு உள்ளாகியது. அதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு அரசிடம் பணமில்லை என்பதால் தேர்தலை நடத்த முடியாது என அரச தரப்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு, தேர்தலை, நடக்கும்….ஆனால் நடக்காது என்ற இக்கட்டான நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவித்தார்.
இதனால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் மதில்மேல் ஏற்றப்பட்டு, அது எந்தப் பக்கம் பாயும் என்பதை எதிர்வு கூறும் வகையில் தேர்தல் அரங்கம் மிகச் சூடான வாதப் பிரதிவாதங்களுக்கு ஆளாக்கப்பட்டது. ஜனநாயகத்iதை நிலைநாட்டுவதா பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டுவதா என்ற விடயமும் அரசியல் அரங்கில் சூடு பிடித்திருந்தது.
ஊள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கபப்பட்டு சட்டமாக்கியுள்ளதைச் சுட்டிககாட்டிய நீதிமன்றம் அந்த நிதியை விடுவிப்பதில் அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். அவ்வாறு நிதியை விடுவிப்பதற்கு இடையூறாக இருக்க முடியாது என தடை உத்தரவு பிறப்பித்து, அடிப்படை மனித உரிமை வழக்கொன்று நடைபெறுவதற்கான அதிகாரத்தைத வழங்கியது.
ஆனலும் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையைச் சுட்டிக்காட்டி, சட்டவாக்கத்துறையாகிய நாடாளுமன்றமும், நிறைவேற்றதிகாரமாகிய ஜனாதிபதி தரப்பும் நீதிமன்றததின் தனித்துவமான அதிகார உரிமைக்கு வேட்டு வைப்பதற்குத் தயாரகியிருக்கின்றன.
கடன் வாங்குவதைக் கொண்டாடுவதுடன் நீதிதித்துறையை இக்கட்டுக்கு உள்ளாக்குகின்ற கேலிக்கும், ஜனநாயகத்தைக் கேவலத்துக்கும் உள்ளாக்குகின்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலர் வகுப்புப் பாடல் ஒன்றே மனதில் நிழலாடுகின்றது.