மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் குடும்ப உறவுகளுக்கு கௌரவம்…

கார்த்திகை 25 இன்று மட்டக்களப்பு,கிரான் வெஸ்லி மண்டபத்தில் சமூகப் பற்றாளர் வே. பாஸ்கரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் குடும்ப உறவுகளை  கௌரவிக்கும்  நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது. மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள மேள வாத்திய இசையுடன் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.  இதன் போது தமது உறவுகளுக்காக அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர், இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வீ. ஆர் .மகேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.