ஜனாதிபதியின் உரை மீது விவாதம் நடத்த வேண்டும்- கோரிக்கை விடுக்கிறார் ரணில்

விவாதம் நடத்த வேண்டும்பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் போது ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம் நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகரை கோரியுள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்போது ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த உரை தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது கலந்துரையாடி ஜனவரி மாதம் 19, 20 அல்லது 21ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துமாறு ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.