வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வாயிலிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகளக ஆசிரியர் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மூளை இழப்பு மூலதன இழப்பு, புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா, தேவையான வெற்றிடங்களை நிரப்பு, உயர் கல்வி இன்றேல் உயர்ச்சி இல்லை போன்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.