கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் திடீரென மழை – 8 வீடுகளும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதம்

பலத்த காற்றுடன் திடீரென மழை

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று மாலை பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்ததனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழை காரணமாக கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

IMG 20220318 WA0079 கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் திடீரென மழை - 8 வீடுகளும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதம்

இதில் செல்வா நகரில் மூன்று வீடுகளும் கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

IMG 20220318 WA0059 கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் திடீரென மழை - 8 வீடுகளும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதம்

இதேவேளை மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.