இலங்கையின் சில பகுதிகளில் கன மழை-7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

50 Views

இலங்கையின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க   தெரிவித்துள்ளார்.

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கன மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால், புலத்சிங்கள மொல்காவ வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Leave a Reply