பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிக்கும் போது, இந்த விடயம் நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரை சந்தித்த பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரி சலுகை நிறைவடையவுள்ளமையினால் அரசாங்கம் மீண்டும் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதேநேரம், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை விடயத்தில் அதிகரிப்பை கோருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாம் இரு முறை ஆராய்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.



