இந்திய அரசு சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நாவில் பன்னாட்டுப் புலனாய்வைக் கோர வேண்டும்-ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

276 Views

சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை நடந்துகொண்டிருக்கும் ஐநா மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்திய அரசு  முன்மொழிய வேண்டும் என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரானக் குற்றங்கள் தொடர்பில்  சான்றுகள் திரட்டிவரும் மாந்த உரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்தின்(OCHRC) பணிக்கு இந்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும்.

சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர இந்திய அரசையும் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் உறுப்பு அரசுகளையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும்,  மீண்டும் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை இயற்ற வேண்டும்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையின் முழுவடிவத்தைக்காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்….

kolathur mani letter pad - ETVK Srila 01 copy (2)

Leave a Reply