இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் கையளிப்பு

India donate 50 buses for Sri Lanka - Newscutter.lk - Sri Lanka's Leading  News Site | Breaking News Updates | Latest News Headlines

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிராமிய பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றைய தினம் 50 பேருந்துகளுக்கான ஆவணங்களை கையளித்தார்.

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு  வரவேற்கத்தக்கது - ஜனாதிபதி | Virakesari.lk

இலங்கையின் கிராம புறங்களின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அண்மையில் 75 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 40 பேருந்துகள் பதிவு நடவடிக்கைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 500 பேருந்து செயற்றிட்டத்தை எதிர்வரும் மாதத்துடன் நிறைவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.