அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8 முதல் நாளை (03) காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது.

சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.

இருப்பினும், தங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாததால், இன்றும் தங்களது அடையாளப் வேலைநிறுத்தத்தைத் தொடரப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தக் காலத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.