தமிழர்களின் வழிபாட்டு இடங்களை தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தும் அரசு

505 Views

தமிழர்களின் வழிபாட்டு இடங்களை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வழிபாட்டு இடங்களை தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் பண்டைய காலம் தொட்டு கிராமிய வழிபாடுகளை இவ்வாறு அடையாளப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் அம்மன் குளம் கிராமத்தில் காணப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற புல்லுமலையில் அமையப்பெற்ற ஹீ சக்தி வேலாயுதர் ஆலய வளாகத்திறகுள் சென்ற தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் கிராம வாசிகளுக்கு தெரியப்படுத்தாமல் “குறித்த பகுதி  தொல்லியல்  இடம்” என பதாகையை நட்டு சென்றுள்ளனர்.

தமிழர்களின் வழிபாட்டு இடங்களை

இந்த மலையில் ஆதியாக முருக வழிபாடு இருந்ததாகவும்   கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சில பௌத்த மத பிக்குகள் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் அதன் பின்னர் தற்போது  இவ்வாறு தொல்லியல் இடமாக பதாதைகள் நடப்பட்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்று தருவதுடன் தமது ஆலய வளாகத்தை பாதுகாத்து தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் இப்பகுதிகளை ஆய்வு செய்து இப்பகுதியில் சுமார் 3000வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் கலாசார பண்புகளுடன் வாழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலும் இவ்வாறு பௌத்த தேரர்களுடன் இணைந்து தொல்பொருள் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இப்பகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

Leave a Reply