ஒரே நாடு ஒரே சட்டம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஞானசார தேரர் வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே சட்டம்  ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென அதன் தலைவர் கலகொடத்தே  ஞானதேரர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு இனத்தையோ, எந்தவொரு மதத்தையோ இலக்கு வைத்து பரிந்துரைகள் செய்யப்படவில்லை என அவர்  கூறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இந்த செயலணி நிறுவப்பட்டதுடன் இதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போவதில்லை என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.