ரெலோ த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் மகிழ்ச்சி -சுமந்திரன் எம்.பி கருத்து

412 Views
த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் மகிழ்ச்சி
rbt

“ரெலோ த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் மகிழ்ச்சியாக  இருக்கும். எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர்  ஊடகவியலாளரொருவர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ரெலோ தமிழரசுக்கட்சியை விமர்சித்து பின்னர் வெளியேறியது அதேபோன்றதான நிலை தற்போது காணப்படுகின்றது. எனவே ரெலோவும் வெளியேறிவிடும் என்ற அச்சம் உங்களுக்கு உள்ளதா என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஏன் அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று அச்சமாக இருக்க வேண்டும். அது சந்தோசமாகவும் இருக்கலாம்தானே. எமது கட்சியில் பலருக்கு நீண்ட காலமான எதிர்பார்ப்பு இவர்கள் எப்போது போவார்கள் என்பது. எனினும் நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது. எல்லோரும் சேர்ந்து இயங்குவது எமது மக்களுக்கு பலமான விடயம் என்பதனால் நாங்கள் எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply