பொதுத் தேர்தல்: பழையவர்கள் ஒதுங்குங்கள்- புது முகங்களுக்கே முன்னுரிமை: சுமந்திரன் தெரிவிப்பு

பழையவர்கள் ஒதுங்குங்கள் புதியவர்களுக்கு இடம் வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் தமிழரசுக் கட்சி களமிறங்கவுள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (06) இடம்பெற்ற வேட்பாளர் தெரிவு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .

யாழ்ப்பாணத் தெர்தல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் நானும் போட்டியிடவுள்ளளோம். ஏனைய 7 பேரும் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும், இம்முறை மக்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப புது முகங்களுடன்,  இளையவர்களுடன் எமதுக் கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.