பேரிடர் மீட்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடும் ஜனாதிபதி பணிக்குழுவை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

2025 டிசம்பர் 31 திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், பேரிடருக்குப் பிந்திய வழிமுறைகளை ஒருங்கிணைத்தல், நிறுவன முயற்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சூறாவளிக்குப் பிறகு மறுகட்டமைப்பு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்தல் ஆகிய விடயங்களுக்காக இந்த பணிக்குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண மட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த பொது பணியாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

வர்த்தமானியின்படி, குறித்த பணிக்குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு முயற்சிகளை விரைவுபடுத்த பிற பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.