கஜேந்திரகுமார் கைது-அமெரிக்க அமைப்பு கருத்து

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்ய்பபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதியின் உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளும் தமிழர்களின் தலைவிதியை சிங்களவர்கள் அல்ல தமிழர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு உதாரணம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு தெரிவித்துள்ளது.

ஒடுக்குமுறை நிறுத்தப்படவேண்டும்,ஒருதேசம் இன்னுமொரு தேசத்தின் தயவில் வாழக்கூடாது எனவும் அமெரிக்க தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுயநிர்ணய உரிமை என்பது மனித உரிமை எனவும் அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.