மத்திய கிழக்கில் நான்கு இலங்கையர்கள் காயம் – பாதுகாப்பு குறித்து ஆராய்வு

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார பிரதிஅமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எனினும், அவர்கள் நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும், தூதரகங்கள் ஊடாக இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஈரானின் போர் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்ற நிலையில் மத்திய கிழக்கிலுள்ள அண்டை நாடுகள் மீது இனிமேல் தாக்குதல்களை நடத்தப் போவதில்லை என்று ஈரான் ஜனாதிபதி அறிவித்திருந்தார். எனினும் ஈரான் இராணுவம் தொடர்ந்தும் குவைத், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட இலங்கையர்கள் அதிகளவில் உள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள