சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச !

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இசுருபாயவில் உள்ள  கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.