முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க , வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.