ஒட்சிசன் தேவைப்பாட்டிற்கு ஒத்துழையுங்கள்- சினாவிடம் இலங்கை கோரிக்கை

460 Views

542af403 97334bb9 ஒட்சிசன் தேவைப்பாட்டிற்கு ஒத்துழையுங்கள்- சினாவிடம் இலங்கை கோரிக்கை

இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ், கொரோனா நோயாளிகளுக்காகத் தேவைப்படும் ஒட்சிசனை வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன துாதுவர் குய்ஜென்ஹாங்கை சந்தித்து கலந்துரையாடிய போது, பீரிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும், கோவிட் 19 தொற்றுநோயைத் தணிக்கும் முயற்சிகளுக்குமான சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இதன் போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் 19- ஒத்துழைப்பு, மக்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், பொருளாதார அபிவிருத்தி,வறுமை ஒழிப்பு மற்றும் பல்துறைசார் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்தக் கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிகரித்து வரும் தேவையை நிறைவு செய்வதற்காக  ஒட்சிசனை உடனடியான வழங்குவதற்கு சீனாவின் உதவியை வெளிவிவகார அமைச்சர் கோரியுள்ளார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply