எந்தெந்தக் குற்றச் சாட்டுக்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றார்கள்-க.வி.விக்னேஸ்வரன் கேள்வி

எந்தெந்தக் குற்றச் சாட்டுக்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றார்கள் என்ற விபரத்தை தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றுத் தாருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உறவுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் உறவினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் சிறையில் வாடும் ஒவ்வொரு தமிழ் அரசியல் கைதியும் தற்போது என்னென்ன குறைகளை, பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளார்கள் என்ற விபரத்தையும் தன்னிடம் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு வழங்கப்படும் தகவல்களை முன்வைத்து நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் உறவினர்களிடம் உறுதியளித்துள்ளார்.