இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கு ஆதரவு வழங்கப்படும்- அமெரிக்கா

288 Views

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை விவசாய அமைச்சில் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கும் பங்கேற்றார்.

இதற்கிடையில், சின்டி மெக்கெய்ன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க ஆகியோர் நேற்று வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் அருணி விஜேவர்தனையும் சந்தித்தனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply