சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கடன் பெற்றும் பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் மேற்கொண்ட நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் இம்முறை கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியதில் பயிர்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன. இதனால் பெருமளவில் நஷ்டமடைந்துள்ளோம். அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.