பருத்தித்துறையில் மீனவர்கள் போராட்டம்

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பாசையூரில் நேற்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா இதனைத் தெரிவித்துள்ளார்.