இந்திய தூதரகத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம் :கடற்தொழில் அமைச்சர் மீது சபா சபா குகதாஸ் குற்றச்சாட்டு

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக யாழில் நடைபெற்ற போராட்டத்தில், எதிர்காலத்தில் 5000பேரை திரட்டி போராட்டம் நடாத்தி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை இல்லாது செய்வோம் என்றும், அமெரிக்கா மற்றும் சீன தூதரகத்தை யாழில் அமைப்போம் என்றும் மீனவர் ஒருவர் கருத்து தெரிவித்தார். அந்த ஒரு மீனவன் தெரிவித்த கருத்தானது இன்று ஒட்டுமொத்தமான மீனவர்களுக்கு மாத்திரமல்ல, குறிப்பாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இராஜதந்திர நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.