மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் முறைமை தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான சட்டம் தற்போது இல்லை. சட்டமியற்றும் அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்று தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையாக ஒத்துழைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நான்கு ஆண்டுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டங்களை வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மாகாண சபைகளை தாம் மறக்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகளின் ஊடாக மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது.
இது ஜனநாயகத்துக்கு பொருத்தமானதாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்தும் இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
ஆகவே எமது விருப்பத்திலான சட்டத்துக்கு அமைய தேர்தலை நடத்த முடியாது என்றும் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



