அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனும் ‘இரண்டாம் தலைமுறை’ கட்சியின் தலைவருமான உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (14) உவிந்து விஜேவீர கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, இலங்கையின் விவசாயிகள் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடிகள் மற்றும் அரசின் செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர், அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகள் சமீபத்தில் மேற்கொண்ட போராட்டத்தை சுட்டிக்காட்டினார். இந்த நெருக்கடிக்கு அரசின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.



