தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு சிறப்பு கொள்கை தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தி ஹிந்து (The Hindu) செய்தித்தாளில் இது தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி தற்போது, பெற்றோரில் ஒருவர் “சட்டவிரோத குடியேறி” என வகைப்படுத்தப்பட்டால், குழந்தையும் அதே நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
இதனால் குடியுரிமை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அகதிகளுக்கான வீடுகள் மற்றும் வசதிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
இதனையடுத்து, அங்குள்ள இலங்கை அகதிகள், மனிதாபிமான சட்ட அமைப்பு, மத்திய–மாநில ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றைக் கோரியுள்ளனர்.
அத்துடன், இந்தியா–இலங்கை ஒப்பந்தங்களின் வரலாற்றுப் பின்னணியைக் கருத்திற் கொண்டு, அகதிகள் மீள்குடியேற்றத்துக்கு தனித்துவமான கொள்கை அவசியம் என்றும் இலங்கை அகதிகள் கோருவதாக தி ஹிந்து கூறுகிறது.



