ஒப்பந்தம் கைச்சாத்துக்கு இந்திய தூதரகம் பாராட்டு

495 Views

இந்திய தூதரகம் பாராட்டுஇந்திய தூதரகம் பாராட்டு: திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
இந்தியஇலங்கை பொருளாதார மற்றும் சக்தி பங்குடைமையில் புதியதோர் மைல் கல். திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்காக சகல தரப்பினருக்கும் வாழ்த்துக்கள்“ என அது தெரிவித்துள்ளது.
இந்தியஇலங்கை தலைமைத்துவங்களின் வழிகாட்டல்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆதரவுக்கும் உளப்பூர்வமான பாராட்டுக்கள்” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply