அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பை இடைநிறுத்தி, சகல தரப்பினருடன் கலந்துரையாடி தேசிய மட்டத்தில் கல்விக்கொள்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜீ.வீரசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற பெய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் தற்போது தரம் 6ஆம் வகுப்பு ஆங்கில அச்சுப்புத்தகத்தில் பதிவிடப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய வலைத்தலம் தொடர்பாகவே அனைவரும் கதைத்து வருகின்றனர். உண்மையில் அதுவும் கதைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதேநேரம் இன்னும் பல தவறுகள், குறைபாடுகள் அந்த புத்தகத்தில் இருக்கின்றன. தயாரிக்கப்பட்டுள்ள பாடத்தொகுப்புகளில் அவுஸ்திரேலியா, கனடா, கென்யா போன்ற நாடுகளின் கதைகளே இருக்கின்றன. எமது மாணவர்களுக்கு இது எந்தளவு பொருத்தம் என பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



