பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது: ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும. கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது” என்றார்.