பொருளாதார நெருக்கடி- ஹஜ் யாத்திரைக்கு இலங்கையிலிருந்து யாரும் செல்லவில்லை

392 Views

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரைக்கு எவரையும் அனுப்புவதில்லை என முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை இலங்கையர்கள் 1,585 பேர் ஹஜ் யாத்திரை செல்வதற்கு சவூதி அரேபியா அனுமதி அளித்திருந்தது.

எனினும், டொலர் பற்றாக்குறை காரணமாக, இவ்வருடம் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு எவரையும் அனுப்புவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply