உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் : கைது செய்யப்பட்ட 60  பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

247 Views

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21.4.2019 ஆண்டு  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்  சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடியை சேர்ந்த  65 பேரை கைது செய்தனர்.

அதேவேளை  இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து  விடுவிக்கப்பட்டதுடன் 2 பேருக்கு எதிராக கொழும்பில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதுடன் 2 பேரின் வழக்கு மேல் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதையடுத்து 60 தொடர்ந்து  பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இந்த வழக்குகள்  விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த 60 பேரையும் எதிர்வரும் 9 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply