திருகோணமலை ,கறுமலையூற்று கடற்கரையியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று(16) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கான கடற்படை பிரதி கட்டளைத்தளபதி மஹேஷ் டி சில்வா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.எல்.எம்.நெளபர், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம்,வெள்ளைமணல் மீனவர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.