நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது, குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு காவல்துறையினருக்கு அனுப்பபட்டது.