401 Views
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தின் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிரான்குளம் விளையாட்டு மைதானத்தினை மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளும் நடவடிக்கையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிரான்குளம் பகுதியை சேர்ந்த விளையாட்டுக்கழக இளைஞர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்ட பகுதியை தனது காணியென கூறி மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் அபகரிக்கமுனைவதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சிலர் கோசங்களை எழுப்பியிருந்தனர்.