காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதி மக்களால் இன்றையதினம்(26.06.2023) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தமக்கு விரும்பியவர்களுக்கு காணிகளை வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் பார்வைக்காக மகஜர் ஒன்று மேலதிகஅரசாங்க அதிபர் சிறிமோகனிடம் மக்களால் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.