திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பெறுமதியான காட்டு மரங்கள் வெட்டப் பட்டுள்ளதுடன், மிருகங்களும் வேட்டையாடப் பட்டுள்ளன.
கந்தளாய், வான்எல, சைதாபிட்டி பகுதியில் இவ்வாறு இனந் தெரியாதோரால் அதிகளவான வீர மற்றும் வின்னாங்கு மரங்கள் பாரியளவில் வெட்டி வீழ்த்தப்பட்டும், தீ வைக்கப்பட்டும் காணப்படுகின்றன.
அத்தோடு, வேட்டையாடிய மானின் எலும்புக் கூடு மற்றும் அதன் கொம்புகளும் அப்பகுதியில் காணப் படுகின்றன. இந்தச் சட்ட விரோத செயல்களைச் செய்த நபர்களை தேடி வருவதாக கந்தளாய் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
மேற்படி பகுதி அதிகளவான தொல் பொருள் காணப்படும் ஒரு பகுதி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கந்தளாய் காவல் துறையினரும் கந்தளாய் வனப் பாதுப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப் படுகின்றது.
அண்மைய காலமாக பெருமளவிலான காடுகள் தமிழர் பிரதேசத்தில் சட்ட முரணாக அழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.