383 Views
இலங்கை மின்சார சபையின் நிதி நிலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
CEB ஊழியர்களுக்கு சம்பளம் மிகவும் சிரமத்தின் மத்தியில் வழங்கப்பட்டதாக சங்கத்தின் பிரதம செயலாளரான ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை குறைக்க முடியாது என்றும், மின்வெட்டு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சில பகுதிகளில் அறிவிக்கப்பட்ட காலத்தை விட அதிக நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சார சபை ஊழியர் ஒருவர் எந்தவொரு வங்கியிலும் கடன் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
CEBயின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் செலவீனங்களைக் குறைப்பதற்காக CEB தலைவர் உள்ளக சுற்றறிக்கையில் பல நடவடிக்கைகளை அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தமிழ் – சிங்களபுத்தாண்டுக காலப்பகுதியில் மின்வெட்டுக் காலம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.