சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு – கோட்டாபய ராஜபக்ஸ

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை அடுத்து, அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை ஆய்வு செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் “சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இலங்கையின் கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து தாம் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய (15) கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் இலங்கை எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.